நாய்களை வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு இரண்டு வருட சிறை… 25,000 ரூபா அபராதம்!

215 0

நாய்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள சட்ட வரைவுவொன்றை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

அமைச்சர் பைஷர் முஸ்தபா இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் , நாய்களை வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்படும் அபராதத் தொகை 25 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கின்ற நிலையில்,.  வழங்கப்படும் சிறைத்தண்டனை காலம் இரண்டு வருடமாக அதிகரிக்கப்படும்.

வீதியில் திரியும் நாய்கள் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

1901 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நாய்கள் பதிவு செய்யும் கட்டளைச்சட்டத்தில் இந்த பிரச்சினையை தீர்க்க போதுமான சட்ட விதிகள் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாய்களை பதிவு செய்யும் கட்டளைச்சட்டம் மற்றும் வெறிநாய்க்கடி கட்டளைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக்கொள்ளக்கூடிய புதிய சட்ட வரைவொன்றை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்தாலும் , அது இதுவரையில் நிறைவு பெறவில்லை.

அதனடிப்படையில் , வீதியில் திரியும் நாய்கள் தொடர்பிலான பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டிய அவசியத்தை கருத்திற் கொண்டு அமைச்சர் பைஷர் முஸ்தபாவால் குறித்த யோசனை அமைச்சரையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.