மகளின் காதல் விவகாரம் : காதலனின் தாக்குதலில் 74 வயது தந்தை உயிரிழப்பு

87 0

மினுவாங்கொடை அலுத்தேபொல பிரதேசத்தில்  74 வயதுடைய வயோதிபர் ஒருவர்  நேற்று வியாழக்கிழமை (28) காலை கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வயோதிப தந்தை தனது மகளின் காதல் விவகாரத்தில் தலையிட்டுள்ளார். இதையடுத்து மோதல் இடம்பெற்றுள்ளது. குறித்த மோதலைத் தொடர்ந்து மகளின் காதலன் ஏனையவர்களுடன் இணைந்து வயோதிபத் தந்தையை தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான வயோதிபத் தந்தை கம்பஹா வைத்தியசாயில் சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.