அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பின் இருவேறு முக்கிய சந்திப்புகள்!!

225 0

அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பின்( International diplomatic council of tamileelam) ஒழுங்கமைப்பில் இன்று பின்லாந்தில் , இருவேறு முக்கிய சந்திப்புகள் நடைபெற்றுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்கும், பின்லாந்து பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவர் கிம்மோ கில்ஜுனென் மற்றும் எம்.பி.க்கள் ஜுஸ்ஸி சரமோ மற்றும் வெய்ஜோ நிமி ஆகியோருக்குமிடையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மற்றுமொரு சந்திப்பு , பின்லாந்து பாராளுமன்றத்தின் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களை கண்காணிக்கும், வலையமைப்பின் பிரதித் தலைவர் எம்.பி வெரோனிகா ஹொன்கசலோவுடன் நடைபெற்றது. இச்சந்திப்புகளின் போது IDCTE பிரதிநிதிகளும், கஜேந்திரகுமார் அவர்களும் தமிழர் தாயகத்தின் இன்றைய நிலையை தெளிவாக விளக்கினார்கள்.சிறிலங்கா அரசபடைகளினால் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், சட்டவிரோத கைதுகள், காணி அபகரிப்புடன் கூடிய பௌத்த மயமாக்கல், உயிர் அச்சுறுத்தல் ,இனஅழிப்பிற்கான நீதி கோருதலில் அனைத்துலக கவனம் போன்ற பலவிடயங்கள் தெளிவாக புள்ளிவிபரங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது. பின்லாந்து அரச பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில். இவ்விடயம் தொடர்பாக தங்களுடைய வரையறைக்குட்பட்டு தங்களால் ஆற்றக் கூடிய பங்களிப்பை தாங்கள் செய்வோம் என கூறினார்கள் .