தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.-பெல்சியம்.

72 0

பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 36ஆவது ஆண்டு நிறைவும், கேணல்
சங்கர் அவர்களில் 22ஆவது ஆண்டு நிறைவுநிகழ்வும் ஒருங்கே மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

முதல் நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து
பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு,மலர்வணக்கம் செலுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து எமது தாயக மண்மீட்புப்
போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்காகவும், அப்போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்காகவும் நாட்டுப்பற்றாளர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் தியாகத்தையும் ஈகத்தையும் சிறப்புரையாக வழங்கினார் கலை பண்பாட்டுக்கழகச்
செயற்பாட்டாளர் திரு.ரகு அவர்கள்.அதனைத் தொடர்ந்து தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் நினைவுச் சுமர்ந்த கவிதைகள் பாடல்கள் பேச்சுக்கள் என்பன இடம் பெற்றன. இவ்வாண்டு இளம் சிறார்கள் மிக எழுச்சியுடன் இந் நிகழ்வில் பங்குபற்றி இருந்தார்கள். அத்துடன் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின்
நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பாடல், பேச்சுப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவரும் பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்கள்.

இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டு எமது தாயக மந்திரம் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
உடன் நினைவு நாள் நிகழ்வுகள் நிறைவுற்றன.