விமல் வீரவங்ச சிறைச்சாலைக்குள் இருந்தபடியே உண்ணாவிரம்

292 0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சிறைச்சாலைக்குள் இருந்தபடியே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தான் அமைச்சராக இருந்த காலத்தில், அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு விமல் அண்மையில் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகிறார்.

இந்தநிலையில் தன்னை பிணையில் விடுவிக்குமாறு அவரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் நேற்று நிராகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.