யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அண்மையில் மீள்குடியேறிய சமூகங்களுக்கு நோர்வே அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக உதவுவதற்கான உடன்படிக்கையை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வேஜியத் தூதுவர் தூர்பியோன் கவுஸத்சேத்த மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பதில் வதிவிடப் பிரதிநிதி லொவிட்டா ராம்குட்டி ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இதற்கு நோர்வே வழங்கும் நிதியுதவி 142 மில்லியன் இலங்கை ரூபாய்களாகும்.
இவ்வுதவியானது சமூக மட்டத்தில் பொருளாதார வாய்ப்புகளை மீள்தகவமைக்கக் கூடியதிறன் பயிற்சிகள், உபகரணங்கள், விதைகள், அவசியமான கட்டுமானங்கள் மற்றும் அதிகரிக்கின்ற உள்ளுர் வேலைவாய்ப்புக்கள் ஆகியவற்றுக்கான வாய்ப்புக்களை வழங்குவதனூடு குறித்த சமூகங்களில் விவசாயம், மீன்பிடி, கால்நடை மற்றும் மாறுபட்ட வருவாய் ஈட்டும் செயற்பாடுகள் ஆகியவற்றினூடு நின்றுநிலைக்கக்கூடிய வாழ்வாதார வாய்ப்புக்களை உருவாக்க திட்டமிடுகிறது.
இவ்வுதவியானது இரண்டு மாவட்டங்களில் இருந்தும் 1000 நேரடிப் பயனாளிகளைச் சென்றடைய எதிர்பார்க்கிறது.
2015 நவம்பரில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வளலாய் மற்றும் தெல்லிப்பழை பகுதிகளில் புதிதாக மீளக் குடியேறிய சமூகத்தினர் தங்கள் வாழ்வாதார நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாகநோர்வே அரசாங்கம் 67 மில்லியன் இலங்கை ரூபாய்களை வழங்கியது
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?
August 27, 2025 -
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025