நாட்டில் குடியிருப்பு ஒன்றில் தீப்பரவல்: 33 பேர் நிர்க்கதி!

77 0

பதுளை – மாப்பாகலை பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீப்பரவல் பல மணி நேரத்திற்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்றிரவு 7.30 அளவில் ஏற்பட்ட இந்த தீப்பவரலில் 6 வீடுகள் முழுமையாக சேதமடைந்ததுடன், மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், பதுளை காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர், சீ ஞானவாகினி தமிழ் மஹா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.