ஐ.எம்.எவ் இன் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்!

55 0

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

முதலாம் கட்ட மதிப்பாய்வுக்காக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் அண்மையில், நாட்டை வந்தடைந்தனர்.

அவர்கள், நாட்டில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பான இறுதி கலந்துரையாடலாக இந்த சந்திப்பு அமையவுள்ளது.

அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை இலங்கை, பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார சவால்களில் இருந்து மீள்வதற்காக இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தது.

இதனடிப்படையில் சர்வதேச நிதியத்தின் பல நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது.