சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு!

110 0

நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை அண்மித்துள்ளது.

இந்தநிலையில், இன்று மதியம் 12.45 அளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான யு.எல் 504 என்ற விமானத்தில் பல சுற்றுலாப்பயணிகள் வந்தடையவுள்ளனர்.

அவர்களுடன், நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குறித்த சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.