கூட்டமைப்புக்கு திருப்தி இல்லாமல், ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட மாட்டாது – சுமந்திரன்

222 0

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு திருப்தி இல்லாமல், ஜெனீவாவில் புதிய பிரேரணை நிறைவேற்றப்பட மாட்டாது என்று அதன் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

ஆங்கில பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனீவா பிரேரணையை நீர்த்துப் போக செய்ய முடியாது.

அதேநேரம் அரசாங்கம் இந்த பிரேரணையின் எந்த விடயத்தையும் இன்னும் அமுலாக்கவில்லை.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இரண்டு இலக்குகள் தற்போது இருக்கின்றன.

ஒன்று அரசாங்கத்தை ஜெனீவா பிரேரணை அமுலாக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு மீண்டும் ஆளாக்குதல்.

இரண்டாவது சர்வதேசத்தின் கண்காணிப்பை மேலும் நீடித்தல்.

இந்த இரண்டு விடயங்களும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் தற்போது இடம்பெறும் நிகழ்வுகளின் ஊடாக நிறைவேற்றப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.