நுகே வீதியில் மீட்கப்பட்ட கொக்கெய்ன் பிரேசிலிருந்து கொண்டு வரப்பட்டது

338 0

cocaine-2பேலியகொட – நுகே வீதியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து நேற்று மீட்கப்பட்ட கொக்கெய்ன் போதைப் பொருள் தொகை, பிரேசிலில் இருந்து போர்த்துகல் ஊடாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பேலியகொடை தனியார் களஞ்சியசாலை ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான இரண்டு கொள்கலன்களை சோதனையிட்ட வேளையில் இந்த கொக்கெய்ன் தொகை மீட்கப்பட்டிருந்தது.

அங்கிருந்து 274 கிலோ கொக்கேய்ன் மீட்கப்பட்டது.

இது 150 கோடி ரூபாய் பெறுமதியானது என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் இதுவரையில் மீட்கப்பட்ட அதி கூடிய கொக்கேய்ன் போதைப் பொருள் தொகை இதுவாகும்.

இதற்கிடையில் இந்த களஞ்சிய சாலையில் உள்ள மற்றுமொரு கொள்கலன் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.