சர்வதேச நீதிபதிகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது – பீரிஸ்

240 0
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்படவேண்டும் என்பதை இலங்கை அரசாங்கம் மீண்டும் ஏற்றுக்கொள்வதாக இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த முறை ஏற்றுக்கொண்ட விடயத்தை உறுதிப்படுத்தும் வகையில், இம்முறை தீர்மானம் அமைந்துள்ளது.
சர்வதேச நீதிபதிகளை அழைக்க முடியாது என ஜனாதிபதியும், பிரதமரும் கூறினாலும், அதற்கு எதிரான உறுதி மொழியை அரசாங்கம் ஜெனிவாவில் வழங்குவதாக ஜீ. எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.