லசந்த கொலையில் திருப்பம்

273 0

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை மற்றும் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கு இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த மேஜர் ஜெனரல் கப்பில ஹெந்நவித்தாரண கீழ் செயல்பட்ட ஒரு குழுவினரே என தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்ற விசாரணை திணைக்களம் இதனை நீதிமன்றில் தெரிவித்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, குற்ற விசாரணை திணைக்களம், கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து இதனை தெரிவித்தது.

இதனிடையே, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க துப்பாக்கி பிரயோகத்தினால் கொலை செய்யப்படவில்லை எனவும், ஆயுதம் ஒன்றின் மூலம் தலையில் தாக்கி மூளையை பாதிப்படைய செய்ததன் மூலமே கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற மருத்துவ சோதனை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணை போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.