பொலிஸ் பரிசோதகரை சந்தேக நபரின் வீட்டு நாய் கடித்தது!

157 0
நாவுல பொபெல்ல பிரதேசத்தில் வசிக்கும் நீதிமன்றினால்  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரைக்   கைது செய்ய சென்ற நாவுல பொலிஸ் குழுவினர் மீது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்  கடித்ததில் பொலிஸ்  பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் பரிசோதகர் சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாத்தளை நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கமைய, நாவுல பொலிஸ் நிலையப்   பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் குழுவொன்று நேற்று வியாழக்கிழமை (14) சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற  போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சந்தேக நபரை  பொலிஸார்  பெரும் பிரயத்தனத்தின் பின்னர்  கைது செய்துள்ளனர்.