ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளின் நலன்புரி மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் ஊடக சேவையை முன்னெடுக்கும் ஊடகவியலாளர்களுக்கு தொழில் துறை மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் சந்தர்ப்பங்களை உருவாக்குவது இலங்கை பத்திரிகை பேரவையின் நோக்கமாக உள்ளது.
குறித்த இலவச உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக கீழே தரப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்தல், (ஊடகவியலாளர் ( ஆண், பெண்), பெயர், முகவரி தேசிய அடையாள அட்டை இலக்கம், தொழில் செய்யும் பத்திரிகை நிறுவனம், பணியாற்றிவரும் காலம், பிள்ளையின் பெயர், தரம், பாடசாலையின் பெயர் உட்பட விபரங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தரால் உறுதி செய்யப்பட்ட மாதாந்த வருமான அறிக்கை மற்றும் முகவரியை உறுதி செய்யும் சான்றிதழ்.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டை அல்லது பணியாற்றி வரும் நிறுவனத்தால் சேவை காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்படும் சான்றிதழின் பிரதி மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி என்பன சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதற்கமைய மேலே குறிப்பிட்டுள்ள விண்ணப்பம் மற்றும் இதர ஆவணங்கள் இணைக்கப்பட்டு 2023- 9- 26 ஆம் திகதிக்கு முன்னர் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். ( தபால் உறையின் இடப் பக்கத்தின் மேல் மூலையில் “ பத்திரிகை ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைத்தல்” என்று குறிப்பிட வேண்டும்.
பேரவை ஆணையாளர்
இலங்கை பத்திரிகை பேரவை
155/15 காசல் வீதி பொரளை
கொழும்பு – 8
தொலைபேசி இலக்கம்- 0112693273 / 0112693274

