ஓய்வு பெற்ற மருத்துவர்களை கடமைக்கு அழைப்பதில் அரசு கவனம்!

149 0

ஓய்வு பெற்ற மருத்துவர்களை திரும்ப கடமைக்கு அழைப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.