ஜனாதிபதி வௌிநாட்டு விஜயம்

39 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

15ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள “G77+ சீனா” அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78ஆவது வருடாந்த அமர்வின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-649 ரக விமானம் ஊடாக  கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 03.15 மணியளவில் டுபாய் நோக்கி ஜனாதிபதி உள்ளிட்ட துாதுக்குழுவினர் புறப்பட்டதாக “அத தெரண” விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

துபாயில் இருந்து ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் மற்றொரு விமானத்தில் அமெரிக்கா செல்லவுள்ளனர்.