துருக்கியின் மிகவும் ஆழமான குகைக்குள் ஒரு வாரகாலமாக சிக்குண்டிருந்த அமெரிக்க பிரஜை உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் இரண்டாம் திகதி குகைக்குள் சிக்குண்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட மார்க்டிக்கேயை மீட்பதற்கான நடவடிக்கைகளில் 150 பேர் ஈடுபட்டனர்.
குறிப்பிட்ட குகையில் ஒரு புதிய பாதையை உருவாக்குவதற்காக குழுவொன்றை வழிநடத்திச்சென்றவேளை இரப்பை குடல்இரத்தப்போக்கால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுவரைமேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கடினமான நிலத்தடி மீட்பு நடவடிக்கை இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியின் தென்பகுதியில்உள்ள மோர்கா சிறையிலேயே இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
டிக்கே குகையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டுள்ளார் என துருக்கியின் குகைள் தொடர்பான சம்மேளனம் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.
டிக்கே தன்னை காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களிற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
குகைக்குள் தனது நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து நான் உயிர் பிழைக்க மாட்டேன் என நினைத்தேன் நான் உயிர்வாழ்வேனா என்ற கேள்வி மாத்திரம் என்னிடம் காணப்பட்டது அதுவே ஒரேகேள்வியாக காணப்பட்டது இந்த சுரங்கம் ஒரு நரகம் என அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் இது பாரதூரமான விடயமில்லை நான் உயிரிழக்கப்போவதில்லை சிறிதளவு இரத்தம் வெளியேறுகின்றது அது தொற்றுநோயாக இருக்கலாம் என நான் நினைத்தேன் எனினும் மேலும் குருதிவெளியேற தொடங்கியது ஒரு கட்டத்தில் நினைவு மங்கதொடங்கியது நான் வாழப்போவதில்லை என நினைத்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் குருதிமாற்றத்தின் பின்னர் அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது பின்னர் ஸ்டிரெச்சரி;ல் வெளியே கொண்டுவரப்பட்டார்.

