சீனாவின் தெற்கு பகுதியில் ஹைகுய் சூறாவளி தாக்கம் காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்தமையால் 100 க்கும் மேற்பட்ட மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக 1,360 குடியிருப்பாளர்கள் வெள்ள நீரில் சிக்கியதோடு, ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் தென் பகுதியை ஹைகுய் சூறாவளி எட்டு நாட்களுக்கு முன்பு தாக்கி பின்னர் அது வெப்பமண்டல புயலாக வலுவிழந்தது.
ஆனால் இடைவிடாத மழை தொடர்ந்து தென்மேற்கு குவாங்சியை வெள்ளத்தில் மூழ்கடிக்கிறது.

யூலின் நகரின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் இடைவிடாத சூறாவளியால் ஏற்பட்ட 115 மண்சரிவுகளால் வீதிகள் சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதுவரை 3 பேரை காணவில்லை, மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும், தெற்கு கடற்கரைக்கு அருகில், பெய்ஹாய் நகரம் பரவலாக பெய்த மழையால் வெள்ளத்தில் மூழ்கியது.
மீட்புப் பணியாளர்கள் நீர் தேங்கிய பகுதிகளில் தொடையின் ஆழத்தில் மிதித்து, படகுகளில் குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதைக் காண முடிந்தது.
செவ்வாயன்று சுமார் 1,360 பேர் சிக்கியுள்ளதாக மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
செவ்வாய்க்கிழமை காலை மூன்று மணித்தியாலத்தில் 101 மில்லி மீற்றர் (4 அங்குலம்) மழை பெய்தமையால் வானிலை கண்காணிப்பு நிலையம் சூறாவளி எச்சரிக்கையை நான்கு அடுக்கு எச்சரிக்கையாக அதிகரித்தது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் திடீர் வெள்ளம், புவியியல் பேரழிவுகள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றின் அபாயங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஹைகுய் சூறாவளி செப்டெம்பர் 5 ஆம் திகதி அன்று தென்கிழக்கு புஜியான் மாகாணத்தில் கரையைக் கடந்த பின்னர் வெப்பமண்டல புயலாக வலுவிழந்தது.
1952 இற்கு பின்னர் பதிவான பாரிய சூறாவளியால் கடந்த வாரம் சனத்தொகை அதிகம் கொண்ட ஷென்சென் நகரில் வரலாறு காணாத மழை பெய்தது.
அண்டை நாடான ஹொங்கொங்கிலும் 140 ஆண்டுகளில் இல்லாத மோசமாக சூறாவளி தாககியுள்ளது.
சீனாவைத் தாக்கும் சூறாவளி மிகவும் தீவிரமடைந்து வருவதாகவும், அவற்றின் பாதைகள் மிகவும் சிக்கலானதாகவும், பேரழிவு அபாயத்தை அதிகரித்து வருவதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் குவாங்சியின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், தென்மேற்கில் சூறாவளி வீசும் என்றும் சீன வானிலை நிர்வாகம் கணித்துள்ளது.
தேசிய முன்னறிவிப்பாளர் குவாங்டாங் மற்றும் குவாங்சியில் ஆகிய பகுதிகளில் சமீபத்திய நாட்களில் அடிக்கடி பெய்யும் மழையால் ஏற்படும் பேரழிவுகளின் தாமதமான விளைவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.

