“ஜனாதிபதியின் குழு நகைச்சுவையானது”

146 0

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட உண்மைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள விசாரணைக் குழுவை நகைச்சுவையாக கருதி முற்றாக நிராகரிப்பதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

இது மக்களின் பணத்தை வீண் விரயம் செய்வதுடன்இ தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களை அவமதிக்கும் செயலாகும் என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறி காமினி தெரிவித்துள்ளார்.

சர்வதேச கண்காணிப்பு மற்றும் மேற்பார்வைக்கு உட்பட்ட சுயாதீன ஆணைக்குழுவினால் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 20 உத்தியோகத்தர்களை அதற்காக பயன்படுத்திக் கொண்டு அவர்கள் நிறுத்திய இடத்திலிருந்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.