ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக சரதி துஷ்மந்த

47 0
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  பொதுச் செயலாளராக சாரதி துஷ்மந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் கட்சியின்  பொதுச் செயலாளராக சரதி துஷ்மந்த நியமிக்கப்பட்டுள்ளார் .

நேற்று திங்கட்கிழமை (11) மாலை கட்சியின் தலைமையகத்தில் இக் கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து  தயாசிறி ஜயசேகரவை நீக்கியமை மற்றும் அவரது கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்தமை குறித்து இதன்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உடனடியாக நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.