கசிப்பு காச்சிய இளைஞன் கைது

133 0

முல்லைத்தீவு நந்திகடல் நீர் ஏரியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சி வியாபாரம் செய்து வந்த இளைஞன் ஒருவரை நேற்றைய தினம் திங்கட்கிழமை(11) முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நந்திக்கடல் கரைப்பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.