ரஸ்யா உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டும் என வேண்டுகோள் விடுக்க தவறிய ஜி20

140 0
image
ஜி20 மாநாட்டின் கூட்டறிக்கையில் உக்ரைன் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் ஏமாற்றமளிக்கின்றன என உக்ரைன்தெரிவித்துள்ளது.

ஜி20 பெருமைப்படுவதற்கு எதுவுமில்லை என தெரிவித்துள்ள உக்ரைனின் வெளிவிவகார பேச்சாளர் பிரகடனத்தில் கடுமையான வார்த்தைகளை சேர்த்துக்கொள்ள முயன்றவர்களுக்கு நன்றிதெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் உக்ரைன் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தால் அது மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் உண்மையை அறி;ந்துகொள்ள உதவியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நிலைமை குறித்து பல்வேறுபட்ட கருத்துக்களும் நிலைப்பாடுகளும் காணப்படுவதாக தெரிவித்துள்ள உக்ரைன் சகல நாடுகளும் சர்வதேச சட்டம் மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டைமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

எனினும் ரஸ்யா உக்ரைனிலிருந்து வெளியேறவேண்டும் என ஜி20 வேண்டுகோள் விடுக்கவில்லை.