கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

75 0

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டொலர் வலுவடைந்தமை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் குறையும் என்ற யூக அடிப்படையில், முந்தைய நாளை விட இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.

அதன்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 89.37 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.05 டொலராகவும் பதிவாகியிருந்தது.