துன்னாலை சதா சகாய மாதா கொடியேற்றம்!

86 0

யாழ் கரவெட்டி துன்னாலை சதா சகாய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆலய பிரார்த்தனையினைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்று கிழமை 03ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது பங்குத்தந்தை சாள்ஸ் ஜஸ்டின் அவர்களின் தலைமையில் கொடியேற்றம் நிகழ்வுகள் இடம்பெற்றது,

தொடர்ந்து நவநாள் பூஜைகளில் 1ம் நாள் பூஜை அருட்தந்தை விஜின்ரஸ்
அவர்களினால் இடம்பெற்று ஒப்புக்கொடுக்கப்பட்டது எதிர்வரும் 09ஆம் திகதி அன்னையின் வீதி வலம் வருகை இடம்பெற்று, 10ம் ஆம் திகதி காலை 7மணிக்கு திருநாள் கூட்டுத் திருப்பலி பங்கு தந்தை சாள்ஸ் ஜஸ்டின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு விழா நிறைவுபெறும்

ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்.