கங்கைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு: அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

166 0
களு, கிங், நில்வளா கங்கைகள் மற்றும் அத்தனகல ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பொறியியாலாளர் எஸ். பி. சி.  சுகீஸ்வர கூறுகையில்,

இவற்றின் தாழ்வான பகுதிகளில் நீர் மட்டம் இன்னும் அதிகமாகவே காணப்படுவதாக  தெரிவித்தார்.

நேற்றைய தினம் (04) எந்தப் பிரதேசத்திலும் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகவில்லையென்றாலும், அந்த ஆறுகளின் நீர்மட்டம் கணிசமான அளவு உயரும் என எதிர்பார்க்கப்படுவதால்  மக்களை அவதானமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்துகிறார்.