அர்ஜுன மகேந்திரனின் மருமகனின் மதுபான நிறுவனத்துக்கு 100 வீத வரிச்சலுகை

210 0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனான ஆலோசியஸால் இயக்கப்படுவதாக கூறப்படும் மதுபான உற்பத்தி நிலையத்துக்கு அரசாங்கம் 100 வீத வரிச்சலுகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

W.M.Mendis & Company என்ற இந்த நிறுவனம் மட்டக்களப்பு கல்குடா பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த வரிச்சலுகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

3 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வது மற்றும் 250 பேருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதால் குறித்த நிறுவனத்துக்கு இந்த வரிச்சலுகை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனத்தை அமைக்க 4 .5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாகவும் ஆங்கில ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.