அரசாங்கம் தங்கள் மீது வழக்கு தொடுத்தாலும் தாங்கள் அஞ்சப்போவதில்லை – பெசில்

339 0

மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, வெற்றிமிகு கட்சியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார்.ரத்மலான பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.

வாக்குகளை உடைக்கும் கட்சியல்ல தமது கட்சி.வெற்றிப்பெறும் கட்சியே தமது கட்சி.தேர்தல்களை பிற்போடுகிறார்கள். எனினும் அது அதிக காலத்திற்கு செல்லுப்படியாகாது.

இந்த அரசாங்கம் தங்கள் மீது வழக்கு தொடுத்தாலும் தாங்கள் அஞ்சப்போவதில்லை.ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பாரிய பெற்றிகளை பெறும் எனவும், தங்கள் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவே ஜனாதிபதி எனவும் பெசில் குறிப்பிட்டார்.