38 வது நாளாக தொடர்கின்றது தொழிற்சங்க போராட்டம்

414 0

நீர்வள மற்றும் நீர்விநியோக சபையின் தொழிநுட்பவியலாளர் பட்டதாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று 38 வது நாளாக தொடர்கின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க போராட்டத்திற்கு இதுவரையில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

தமது சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நீர்வள மற்றும் நீர்விநியோக சபைக்கு பெறும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபாலி ரந்தெனிய எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்