நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சிலரால் அரசியல் லாபம் பெறும் நோக்கில் நாட்டில் இனவாதத்தை தோற்றிவிக்க முயற்சிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். இதேவேளை, நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரச நிதி மன்றும் அரச சார்பற்ற நிதியங்கள் ஈடுபடுத்தப்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

