வீடு கட்டுவது எளிதானது அல்ல. அதுவும் தனக்கு பிடித்தமான வீட்டை உருவாக்குவது மிகவும் கடினம். எவ்வளவு பணம் செலவழித்தாலும், சில நேரங்களில் மனதிற்கு ஏற்றவாறு அமைவது கடினம். ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு நபர் 12 வருடங்களாக பூமிக்கடியில் 11 அறைகளுடன் இரண்டு மாடி வீட்டை கட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
#WATCH | Uttar Pradesh | In Hardoi, a man builds an underground two-storeyed house with 11 rooms, over a span of 12 years. pic.twitter.com/2siU0K5LHc
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 30, 2023
வீடியோவை பார்க்கும் போது, செயற்கையாக உருவாக்கப்பட்ட செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை கொண்டு கட்டியதாக தெரியவில்லை. முழுவதும் பாறையிலான பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி, அழகாக வடிவமைத்துள்ளார். அந்த நபரின் வீட்டை பார்க்கும் போது, மன்னர்கள் பயன்படுத்திய ரகசிய அறைகள் போன்று உள்ளது.

