கேரள கஞ்சா- போதை வில்லை வைத்திருந்த பெண் கைது

319 0

கேரள கஞ்சா மற்றும் போதை வில்லை என்பனவற்றை தம்வசம் வைத்திருந்த பெண்ணொருவரை ஜா-எல, கல்லவத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட படையின் தலைமையக அதிகாரிகள் குழுவொன்றினால் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து 8 கிராம் கேரள கஞ்சா மற்றும் 30 போதையேற்றும் வில்லைகள என்பன மீட்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய பெண் மேலதிக விசாரணைக்காக ஜா எல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, 18.73 கிராம் ஹெரோயின் உடன் பிறிதொரு பெண் பொரள்ளை – பேஸ்லைன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொரள்ளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்குரிய பெண் கைது செய்யப்பட்டார்.