நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில், தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளன இந்தநிலையில், இரத்தினபுரி மாவட்டத்தில் இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தமது வாழ்வாதரத்தை கொண்டு செல்வதில் பாரிய இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.
வறட்சி காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள இறப்பர் தோட்டங்களில் இருந்து பெறப்படும் பாலின் அளவு குறைந்துள்ளதுடன் தமக்கான வருமானம் வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக இறப்பர் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தேயிலை தோட்டங்களும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக தேயிலை தோட்டங்களில் விளைச்சல் வீழ்சியடைந்துள்ளதாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுக்கின்றனர்.
அத்துடன், உள்நாட்டு பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, நெற்செய்கை உள்ளிட்ட பல பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

