அடுத்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பல ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.குருநாகலில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பீ ஹரிசன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு விழாவின் போது சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய பல ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்ததாக அவர் குறிப்பிட்டார்.அதன் அங்கத்தவர்கள் பலர் மீண்டும் கட்சியில் இணைவதற்கு ஆர்வமாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் கூட அறிந்திருப்பதாகவும் அது செப்டெம்பர் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் ஹரிசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி லேக்ஹவுஸ் கட்டிடத்திற்கு முன்பாக நடத்தவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

