சட்டம். ஒழுங்கு தொடர்பில் கலந்துறையாடல்

307 0
திருகோணமலை மாவட்டத்தில் நீதி நிர்வாகத்திற்குற்பட்ட சகல பொலிஸ் உயரதிகாரிகளுக்கும். நீதவான்களுக்குமான விஷேட  கலந்துரையாடல் கிழக்கு மாகாண மேல் நீதிபதி அண்ணலிங்கம் பிரேம் சங்கர் தலைமையில் திருகோணமலை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில்  நடைபெற்றது.
சட்டம்.ஒழுங்கு தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்கு தொடருனராக செயற்படும் பொலிஸாரின் செயற்பாடுகள்.குறைபாடுகள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் பற்றியும் காலம் தாழ்த்தாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குதல் போன்ற விடயங்கள் இக்கலந்துறையாடலில் ஆராயப்பட்டது.
குறிப்பாக  பிடி விறாந்து விதிக்கப்ட்டவரை கைது செய்யும் நடவடிக்கையின் போது பொலிஸாரின் அசமந்தப்போக்குகள் பற்றியும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதுடன் ஆலோசனையும் வழங்கப்பட்து.
குறைபாடுகள் தவறுகளை நிவர்த்தி செய்து சட்டம்.ஒழுங்கை நிலைநாட்டி உரிய நேரத்தில் காலம் தாழ்த்தாமல் நீதியை பெற்றுக்கொடுப்பதே இக்கலந்துறையாடலின் முக்கிய நோக்கமாகும் என திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இதன் போது தெரிவித்தார்.