வடகொரியாவுக்கு எதிராக இணைந்து செயற்பட அமெரிக்காவும் சீனவும் இணங்கியுள்ளன.
சீனா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதன்போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறியும் வடகொரியா தொடர்ச்சியாக அணுவாயுத சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே அமெரிக்காவும் சீனாவும் இந்த இணக்கத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

