கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

122 0

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கு தேவையான பெரும்பாலான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அச்சிடப்பட்ட புத்தகங்களில் பெரும்பாலானவை அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் துறைக்கான புத்தகங்கள் அடுத்த வாரமளவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அனைத்து சீருடை துணிகளையும் சீனாவிடம் கோரியுள்ளதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.