இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நாடு முழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 30 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நாடு முழுவதும் 62 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சில துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தனிப்பட்ட தகராறு மற்றும் சொத்துப்பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

