பண்டாரவளை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பெண்ணொருவரை கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், சிகிச்சைபெற்று வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பண்டாரவளை – எட்டாம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 23 ஆம் திகதி கொலைசெய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

