அரசியல்வாதிகள் சிலரின் கடந்த கால அரசியல் செயற்பாடுகளினாலே இனங்களுக்கிடையே பிரிவினையை ஏற்பட்டுத்தியதாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் குற்றம் சுமத்தினார்.
மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இனவாதம், பிரதேசவாதம் மற்றும் மதவாதங்களால் குறிப்பிட்ட சிலரே வெற்றி பெறுகின்றனரே தவிர சமூகம் தோல்வியையே சந்திக்கின்றது.
மேலும் அரசியல் தலைமைகளின் எழுச்சிக் கோஸங்களினாலும் வீரப் பேச்சுக்களினாலுமே இளைஞர்கள் ஆயுத வழிக்குள் பிரவேசித்தனர் எனவும் றிஸாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

