திரு. கஜேந்திரகுமார் அவர்களின் வீட்டின் முன்பாக பிக்குகள் மற்றும் இனவாதக் காடையர்களால் பதட்டம்.

301 0

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் அவர்களின் கொழும்பில் அமைந்துள்ள,வீட்டின் முன்பாக பிக்குகள் மற்றும் இனவாதக் காடையர்கள் என்ற செய்தியினால் பதற்றம் நிலவுகிறது. அங்கு பொலிஸ் , விமானப்படையினர் குவிக்கப்படுவதோடு, நீர்த்தாரை ஊர்தியும் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற எம்.பி கஜேந்திரகுமார் அவர்களின் வீட்டின் முன்பாக இனவாதக் காடையர்கள் குவிக்கப்பட்டதனால் மக்கள் அச்சம். சிங்கள பேரினவாத அரசினால் ஒரு தமிழ் நாடாளுமன்ற எம்.பி க்கு அச்சுறுத்தல் நிலை என்றால் தமிழர்களின் நிலை குறித்து சர்வதேசம் கவனம் எடுக்க வேண்டும்.