உலகக்கிண்ண சதுரங்கப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி : இரண்டாம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா

162 0

உலகக்கிண்ண சதுரங்க தொடரின் இறுதிப் போட்டியில் நோர்வே வீரரான மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

அவருடன் எதிர்த்து போட்டியில் கலந்துகொண்ட இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான இளம் வீரரான பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

டை – பிரேக்கர் ( Tie-breaks ) இன் முதல் சுற்றுகளிலும் மேக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen) வெற்றி பெற்றார்.

பிரக்ஞானந்தா இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளிலும் உலகின் முதல் தர வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு சமநிலையில் (Draw) முடித்தார்.

18 வயதான பிரக்ஞானந்தா கடந்த திங்கட்கிழமை Tie-breaker-இல் உலகின் மூன்றாம் நிலை வீரரான Fabiano Caruana வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

நோர்வே வீரரான மேக்னஸ் கார்ல்சன், நிஜாத் அபாசோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

உலகக்கிண்ண சதுரங்க தொடர் அசர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்றது.