கடந்த 15 ஆம் திகதி திக்வெல்ல, போடரகந்த பிரதேசத்தில் உயிரிழந்த மாத்தறை, உயன்வந்த தெற்கு பகுதியைச் சேர்ந்த 45 வயதான முதுகமுவ ஆராச்சி சஞ்சீவ என்பவரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கி என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
மாத்தறை நீதிவான் நீதிமன்ற பி.ஆர். 152/9 இலக்கம் கொண்ட T- 56 துப்பாக்கி மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் அறையில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதுடன், வழக்குப் பொருட்களை வெளியே எடுத்துச் சென்றமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

