5 வாரத்தில் 140 கிலோவை இழந்தார் உலகின் அதிக எடையுள்ள பெண் எமான்

207 0

மும்பையில் சிகிச்சை பெற்று வரும் உலகின் அதிக எடையுள்ள பெண்ணான எமான் 5 வாரத்தில் 140 கிலோவை குறைத்துள்ளார்.

உலகின் அதிக உடல் எடை கொண்ட எகிப்து பெண்ணான எமான் அகமது தனது உடல் எடையை குறைக்க இந்தியாவில் சிகிச்சை எடுத்து வருகிறார். அதன் பலனாக கடந்த 5 வாரங்களில் தனது உடல் எடையில் 140 கிலோவை குறைத்துள்ளார்.

தனது உடல் எடையை குறைப்பதற்காக கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி மும்பை வந்த எமான், தற்போது லாப்ராஸ்கோப்பி எனப்படும் குடல்வாழ் அறுவைசிகிச்சைக்காக தனது இரைப்பையின் அடிவயிற்றுப் பகுதியை குறைத்து வருகிறார். அதன் மூலம் 498 கிலோ எடை கொண்ட தனது தனது உடல் எடையை 15 சதவீதம் குறைத்துள்ளார். அதாவது தனது உடல் எடையில் 140 கிலோவை இழந்துள்ளார்.

அடுத்த சில மாதங்களில் 20-30 கிலோ வரை எமானின் உடல் எடை குறைக்கப்பட உள்ளதாகவும், உடலில் இருந்து அதிகளவிலான தண்ணீரை வெளியேற்றுவதன் மூலம் உடல் எடை குறைத்து வருவதாக மும்பை சைஃபி மருத்துவமனை தலைவரும், மருத்துவருமான முபசல் லக்டவாலா தெரிவித்துள்ளார்.

36 வயதாகும் எமான் கடந்த 25 வருடங்களாக, அலெக்சாண்ட்ரியாவில் உள்ள வீட்டில், தனது அறையை விட்டு வெளியேறாமல் இருந்தார். இந்நிலையில், சிறப்பு சரக்கு விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த அவர் விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு லாரி மற்றும் கிரேன் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவர்கள் எமானுக்கு சரியான இடைவேளையில் பத்திய முறைப்படியே உணவு வழங்கி வருகின்றனர். நீர் ஆகாரங்களையே அதிகளவில் அளித்து வருகின்றனர்.