“கைது செய்யப்படுவதற்காகு நான் அட்லாண்டா நகருக்கு செல்லவிருக்கிறேன்” -ட்ரம்ப்

146 0

தேர்தலில் சட்டவிரோத தலையீடு குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாளை மறுதினம் வியாழக்கிழமை ஜோர்ஜியா மாநிலத்திலுள்ள நீதிமன்றத்தில் தான் ஆஜராகவுள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் தான் ‘கைதாகவுள்ளதாக’ அவர் கூறுகிறார்.

இவ்வழக்கை மேற்பார்வை செய்யும் நீpதிபதி, ட்ரம்புக்கு பிணைத் தொகையாக 200,000 டொலர்களை நிர்ணயித்துள்ளார்.

இந்த உடன்பாட்டின்படி, சாட்சிகளை அல்லது குற்றம் சுமத்தப்பட்ட ஏனையோரை அச்சுறுத்தாவிட்டால் வழக்கு விசாரணை முடியும்வரை ட்ரம்ப் சுதந்திரமாக நடமாட முடியும்.

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, ஜோர்ஜியா மாநில பெறுபேறுகளை மாற்றியமைக்க முற்பட்டாரென, அப்போதைய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் மீது 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இக்குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.

இவ்வழக்கு தெடர்பாக ட்ரூத் சோஷல் சமூகவலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்த டொனால்ட் ட்ரம்ப்,  “நீங்கள் நம்புவீர்களா? இடது சாரி மாவட்ட வழக்குத் தொடுநர் ஃபெனி வில்லிஸினால்  கைது செய்யப்படுவதற்காகு நான் ஜோர்ஜியாவின் அட்லாண்டா நகருக்கு வியாழக்கிழமை செல்லவிருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.