இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு : “மஸ் கடே கலுவா” உயிரிழப்பு

166 0

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது “மஸ் கடே கலுவா” என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகம் 21 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 8.45 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

கல்கிசை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.