ஐ.தே.கட்சிக்குள் மீண்டும் சர்ச்சை

326 0

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரதித் தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பான சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் ஐ.தே.கட்சிக்கு மூன்று பிரதித் தலைவர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிராக கருத்துக்கள் எழுந்துள்ளன. இது தொடர்பில் அடுத்த வாரமும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவ்வட்டாரங்கள் கூறியுள்ளன.

ரணில் விக்கிரமசிங்க எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது, கட்சியின் பிரதித் தலைவர் குறித்து பெரும் சர்ச்சை கட்சிக்குள் எழுந்தது. இருப்பினும், ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர், கட்சியின் பிரதித் தலைவர் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள முதற்தடவை இதுவாகும் என கூறப்படுகின்றது.