7 குழந்தைகளை கொலை செய்த பிரித்தானிய தாதிக்கு ஆயுட்கால சிறை

171 0

பிரிட்டனில் 7 குழந்தைகளை வேண்டுமென்றே கொலை செய்தாரென குற்றம் சுமத்தப்பட்ட தாதியான லூசி லெட்பிக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகரிலுள்ள நீதிமன்றம் இன்று இத்தீர்ப்பை அளித்தது.

33 வய­தான லூசி லெட்பி எனும் இப்பெண், இங்­கி­லாந்தின் செஸ்டர் நக­ரி­லுள்ள, கவுன்டஸ் செஸ்டர் வைத்­தி­ய­சா­லையில் 2011ஆம் ஆண்டு முதல்  தாதி­யாக லூசி லெட்பி பணி­யாற்­றினார்.

2015 ஜூன் மற்றும் ஒக்­டோபர் மாதங்­க­ளுக்கு இடையில் 5 குழந்­தை­க­ளையும் 2016 ஜூன் மாதம் மேலும் இரு குழந்­தை­க­ளையும் பல்­வேறு முறை­களில் லூசி லெட்பி கொலை செய்தார் எனவும் மேலும் 6 குழந்­தை­களை கொல்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்டார் எனவும் குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

ஊசி மூலம் காற்றை செலுத்­தியும், பல­வந்­த­மாக பால் கொடுத்தும், இன்­சுலின் மூலம் நஞ்­சூட்­டியும் வேண்­டு­மென்றே அவர் குழந்­தை­களை கொலை செய்தார் என குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

2015, 2016 காலப்­ப­கு­தியில்  வழக்­குத்­துக்கு மாறான எண்­ணிக்­கையில் சிசுக்கள் உயி­ரி­ழப்­பது மற்றும் உடல்­நலக் குறைவால் பாதிக்­கப்­ப­டு­வது போன்ற சம்­ப­வங்கள் தொடர்­பாக பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

2017 ஆம் ஆண்டில் பொலி­ஸா­ர் விசா­ர­ணையைத் தொடங்­கினர். மேற்­படி சம்­ப­வங்கள் இடம்­பெற்ற நாட்­களில் குறித்த வைத்­தி­ய­சாலை அறையில் தாதி லூசி லெட்பி பணியில் இருந்தமை தெரி­ய­வந்­தது.

2018 ஆம் ஆண்டு அவரை பொலிஸார் கைது செய்­தனர். கடந்த ஒக்­டோபர் மாதம் நீதி­மன்ற விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

தன்­மீ­தான குற்­றச்­சாட்­டு­களை லூசி லெட்பி நிரா­க­ரித்தார். எனினும், 7 சிசுக்­களை கொன்­றமை, 6 சிசுக்­களைக் கொல்ல முயன்­றமை சந்­தே­கத்­துக்கு இட­­மின்றி  நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக நீதி­மன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (18)தெரி­வித்­துள்­ளது.

நவீன பிரிட்டனின் மிக மோசமான சிறுவர் தொடர் கொலையாளி என லூசி லெட்பி வர்ணிக்கப்படுகிறார்

அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை  அறிவித்தது.

இத்தீர்ப்பின்படி, லூசி லெட்பி ஒருபோதும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்.

“நீர் புரிந்த ஒவ்வொரு குற்றத்துக்காகவும், உமது வாழ்க்கையின் எஞ்சிய காலம் முழுவதும் சிறையில் கழிக்கப்படும்” என நீதிபதி கூறினார்.