யாழில் உணவருந்திய பின் சோடா குடித்தவர் உயிரிழப்பு

106 0

உணவருந்திய பின்னர் சோடா குடித்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று (19) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவர் உணவருந்திய பின்னர் சோடா குடித்தவேளை மயங்கி விழுந்துள்ளார்.

கடையில் இருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.