குழந்தைகளுக்கான இருதய நோய் வைத்திய நிபுணர்கள் 6 பேர் நாட்டைவிட்டு வெளியேற்றம்

91 0
நாட்டிலிருந்து வைத்தியர்கள் வெளியேறுவது போதிய வைத்தியர்கள் இன்மை போன்றவற்றிற்கு மத்தியில் குழந்தைகளுக்கான இருதய நோய் நிபுணர்கள் 6 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்ற கவலை அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, நாட்டில் குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை சேவைகள் கேள்விக்குறியாகியுள்ளது.

நாட்டில் மருத்துவ துறையில் முழுத் தகுதி பெற்ற குழந்தைகளுக்கான இருதயநோய் நிபுணர்களின் நிலையான எண்ணிக்கை 20 ஆக இருக்க வேண்டும். இருப்பினும், தற்போதைய எண்ணிக்கை பதினொன்றாக மட்டுமே இருந்தது. அவர்களில் ஆறு பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

தற்போது, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை  (LRH), சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலை ஆகியவற்றில்  முழுத் தகுதியுள்ள ஐந்து குழந்தைகளுக்கான இருதயநோய் வைத்திய நிபுணர்கள் மட்டுமே உள்ளனர்.

குறித்த  வைத்திய  நிபுணங்களின்  பற்றாக்குறையானது மேலதிக சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக மூத்த குழந்தை இருதயநோய் நிபுணர் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு  தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கான சிகிச்சைக்கு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையை பரிந்துரைக்கப்படுவது வழமையான விடயம் என்றாலும், தற்போது சிறுவர்கள் அனுமதிக்கபடுவது அதிகரித்து காணப்படுதற்கு  நிபுணர்களின் பற்றாக்குறைக்கு காரணமாக இருக்கலாம்  சுகாதார நிபுணர் மேலும் தெரிவித்துள்ளார்.

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை  உள்ள நான்கு குழந்தை இருதயநோய் வைத்திய நிபுணர்களில், இருவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

இதன் காரணமாக  இருதய சிகிச்சை சேவைகளை நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது, இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இருப்பினும், சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விடயத்தை முழுமையாக ஒழுங்குப்படுத்த  இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.